கண்ணா கண்ணா (கவிதை)

கண்ணா கண்ணா
ஊடுருவும் பார்வையில் கவர்ந்தவனே
உன் சுவாசத்தில் நானே
உள்ளம் இரண்டும் ஒன்றாயின்
உன்னருகில் இல்லாத போதும்
உறவாடுகிறேன் உன்னில்

கனவில் கலையாமல்
கண்ணிமைகளின் உள்ளே
கருவண்டாய் அமர்ந்து
காரிருள்ளிலும் விடாமல்
காதல் செய்கிறாய் நீ

துள்ளி ஓடும் நதியில்
துளி துளியாக கலந்திடுமே
தித்திக்கும் காதல் தேனே
தனியாக பயணித்து
திரியாமல் சேர்ந்திடும் உன்னிடம்

பரந்து விரிந்த
பாரினில் பாவை நான்
பாராமல் கண்ட உன்
பார்வையில் அடிமையானேனே
பார்த்தா… என்ன செய்கிறாய் நீ

வீசும் குளிர்மையான தென்றலாக
வந்து கிட்ட வந்து
வேகமாக தழுவிடுவாயோ
வேலியில்லா காதலில்
வேரில்லாமல் படர்ந்திடுவேனே உன்னை

கண்ணா கண்ணா என்
காதல் நீயே கண்ணா!

Advertisements