ரகசிய தோழன் (கவிதை)

ரகசிய தோழன் ஒருவன் வந்தான்
சிரிக்க சிரிக்க பேசி வைத்தான்
ரசிக்க சில நினைவுகள் தந்தான்
சிறகடித்து வானில் பறக்க செய்தான்…

பகலும் நீயே இரவும் நீயே
யாருமற்ற தனிமையில் கனவுகளை தந்தாயடா
பசுமையாக நீயும் பசை போலவே
யாதுமாகி கண்ணிமைகளில் தழுவி நின்றாயடா

துளி துளியாக தேனூட்டினாயே
திகட்ட திகட்ட தனிமையில்
படி படியாக காதல் மொழியே
சொட்ட சொட்ட உன்னருகில்

நாசியில் எப்போதும் உன் வாசமே
நெஞ்சம் முழுவதும் உன் வசமே
அலைவரிசை பாடல்களும் தந்தனவே
அமுதமாக உன் நினைவுகளையே

தொலை தூரத்தில் நீயும்
தொலை பேசியில் மட்டுமே நானும்
தொல்லையாக இந்த இடைவெளியும்
தேடல்களின் பெரும் வெகுமதியோ

அன்பே அன்பே இது போதுமே
இதயம் கேட்கிறதே உன் அருகாமையே
இனி உறையும் பனி போலவே
என் விழிகளும் உன்னை காணும் வரையே!!!

Advertisements

4 thoughts on “ரகசிய தோழன் (கவிதை)

 1. wow sis semmaiyaa irukku kavithai…

  pothuvaa kavithai meaning understand panna mudiyama odiven but intha lines ellam sueprb ah irunthathu.. 🙂 keep roocking sis

  Like

 2. மதுவதனி says:

  ஹாய் ஆர்த்தி..
  ரக்சிய தோழன்.. என்னை மிகவும் ரசிக்க வைத்தான்.. அருமையான வரிகள்..
  அன்பே அன்பே இது போதுமேஇதயம் கேட்கிறதே உன் அருகாமையேஇனி உறையும் பனி போலவேஎன் விழிகளும் உன்னை காணும் வரையே!!!
  சூப்பர் டா..

  Liked by 1 person

  • ஹாஹா… மது … ரொம்ப நன்றிடா! கவிதைகளும் வாசகர்களுக்கு கண்ணில் படுவது சந்தோஷம்..

   Like

Comments are closed.