அந்நிய காதலன் (கவிதை)

என்றோ ஒரு நாள்
எதிர்பாராமல் எதிரில்
நீ, அன்னியனாய்
அன்றில் இருந்து
இன்று வரை
என்னை வதைக்கிறாய்
நித்தமும் உன் முகம்
மின்னி மறையும்
மின்மினி பூவாய்
விழியோர சுருக்கத்தில்
விழி திறந்தால்
வெற்றுச்சுவர் வெளுப்பாய்
அறிமுகமில்லாமல் நீ
அனுமதியில்லாமல் என் காதல்
நிறைவேறுமா கேள்வியாய்
வருவாயோ நீ
காத்திருக்கிறேன் உனை
காண ஏக்கமாய் …
— ஆர்த்தி ரவி

Advertisements