காதல் 1 (கவிதை)

என்னை வாழ தூண்டுவது மட்டும் அல்ல
என்னை வீழ்த்துவதும் நீ என் மேல்
கொண்ட வெறித் தனமான இந்த காதல்
நேசமே உன் மூச்சாய் வலம் வருவாய்
நெஞ்சம் முழுவதும் பூ மழை பொழிவாய்
சத்தமே இல்லாமல் மறைந்து நீ வருத்துவாய்
சில நேரம் நீ ஒதுங்கி இருந்தாலும்
சிந்தனை மொத்தமும் குத்தகை எடுத்து விட்டாயடா
பல நேரம் நினைவலையில் நீ என்னருகிலடா
இனிக்கிறது, இதழ்களில் மட்டும் அல்ல
இதயம் வரை உன் தீண்டலும்
நீ கொண்ட ஆழமான காதலும்…

Advertisements