இதயப்பூவே எனை அறிவாயோ?

ஆர்த்தி ரவியின் “இதயப்பூவே எனை அறிவாயோ?”
அறிவிப்பு:

நேசமிகு வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!

“இதயப்பூவே எனை அறிவாயோ” என்ற தலைப்பில் ஒரு அழகான காதல் கதையுடன் வந்திருக்கிறேன்.

நான் கேள்விப்பட்ட ஒரு சில நிகழ்வுகளைக் கொண்டு முழுவதுமாக எனது சொந்தக் கற்பனையில் உதயமானது தான் இக்கதை. இதில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே…

ஒரு ஆறு மாதத்திற்கு முன்பே, இந்தக் கதையின் கரு என் மனதில் உருவானது. இதை என் மூன்றாவது கதையாக எடுத்து எழுத நினைத்திருந்தேன். ஆனால், இரண்டாவது கதையாக இதை தரச் சொல்லிக் கேட்ட முகநூல் நண்பர்களின் தேர்வினால்… இதயப்பூவான “தமிழச்சி”… “யாழினியன்” உடன் உங்களைச் சந்திக்க பயணப்பட்டுவிட்டாள். இந்த இருவரில், யாரின் இதயம் முதலில் களவாடப்பட்டது எனக் கதையின் ஓட்டத்தில் தெரிந்து கொள்வோம்…

” இதயத்தின் சு(மை)கம் நீ ” என்ற தலைப்பில் இங்கு பதிவிட்ட எனது முதல் கதை, அமெரிக்காவில் பிறந்து அங்கே வாழ்ந்து வரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த நாயகன் நாயகியை கொண்டு முழுவதுமாக அமெரிக்காவிலேயே பயணிப்பதாக இருந்தமையால் ஆங்கில வார்த்தைப் பிரயோகம் அதிகமாக இருந்தது. சில தோழர் தோழியர் அதைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர். என்னால் இயன்ற அளவு இக்கதையில் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்துத் தருகிறேன்.

சில வாசகர்கள் முதலில் கேட்டுக்கொண்டதன் பேரில், அதிக இடைவெளி இல்லாமல் இக்கதையை சிறு சிறு பதிவுகளாக வாரம் இரு முறை பதிவிட இருக்கிறேன். நீங்களும் வாசித்து விட்டு எனக்காக ஒரு இரண்டு வரியில் தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவில் சொல்லுங்கள். அவை தாம் என் எழுத்தை மேலும் மெருகேற்றி அழகு பெறச் செய்யும்.

வருகின்ற வியாழன், மார்ச் 31 அன்று முதல் பதிவு பதிவேற்றம் செய்யப்படும்.

நன்றி!

அன்புடன்,
ஆர்த்தி ரவி

Advertisements

4 thoughts on “இதயப்பூவே எனை அறிவாயோ?

  1. மிக்க நன்றி Ramaswamy rengamani! முதல் கதைக்கான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்… 🙂

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s