விலகிய நட்பு

வருடங்கள் கடந்து சென்றாலும்
கடந்தகால நினைவுகள் சிலவை
நேற்று நடந்தது போல்
நெஞ்சில் இன்றும் பசுமையாய்..
ஆனால், நினைவுகளின் காரணி
நிஜத்தில் மட்டும் அல்ல
மனதை விட்டும் வெகு தொலைவில்..
உன் செயல்கள் உன்னை
விலக்கி வைக்க சொன்னாலும்
நம் கடந்தகால பந்தம்
என் எண்ணங்களில் இருந்து
விலக மறுப்பது நிஜம்!
நண்பனாய் இருந்து துரோகியாய்
மாறியது மனதின் ரணவலியை தந்தபோதும்
நீ பொய்த்து போனது ஏனோ?
என்ற வினா நினைவலையில்..
— ஆர்த்தி ரவி

Advertisements

2 thoughts on “விலகிய நட்பு

Comments are closed.