மௌனங்களின் முகமன்

மௌனங்களும் ஒலி வடிவம் பெற்று
முகமன் கூறி கை குலுக்கின…

இது நட்பின் தொடக்கம் மட்டுமா
இல்லை காதலின் அறிமுகமா..

எதுவாயினும் உன் முதல் மறுமொழி
எனக்குள் மாயங்கள் செய்வது உண்மை..

முகம் அறியாமல்
முகவரியும் தெரியாமல்
நிகழ்ந்த நம் சந்திப்பு
நேச விதை தூவி
என்னில் காதல் கவி
சாரல்களை உரசிப் போகிறது..

இதுவரை எனக்கிருந்த தயக்கம்
இன்று உன் மறுமொழியில்
தகர்ந்து போனதே..

பட்டாம் பூச்சி கனவுகளை ஏந்தி
நானும் மிதக்கிறேன் வானில்
உன்னை நோக்கியே..

—– ஆர்த்தி ரவி

Advertisements