தமிழ் புத்தாண்டு

சித்திரையா, தையா என குழம்பி நிற்கும் நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கதையை சொல்லி கொண்டாடப்படும். காலப்போக்கில் அதையொட்டி புதிய கதையாடல்கள் உருவாகும். தீபாவளி என்றால் தமிழ்நாட்டில் நரகாசுரன் இறந்தநாள். வடக்கே ராமன் அயோத்தி திரும்பிய நாள். பவுத்தத்தில் புத்தர் ஞானம் அடைந்த நாள். ஜைனத்தில் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாள்.
அதுபோல தமிழர் கொண்டாடிய சித்திரை 1க்கு சொல்லப்படும் கதைகளில் ஒன்று இந்த 60 ஆண்டு காலக் கணக்கு. சித்திரை 1 ஐ தமிழ் புத்தாண்டாக ஏற்றால் இந்த 60 ஆண்டு சுழற்சியையும் கண்ணந் நரதர் கதையையும் நம்பவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. சித்திரை 1 தொல்காப்பியர் பிறந்த நாள். சிலப்பதிகார காலம் தொட்டு தமிழர் சிறப்புடன் விழா கொண்டாடிய நாள்.
சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக்
கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும்
மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து மூதிற்பெண்டிர் வழிபட்ட நாள் என்கிறது சிலம்பு…
அதனால் இருக்கும் மரபை இழக்காது கொண்டாடுவோம்.
கேரள நண்பர்களுக்கு இனிய விஷு திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நன்றி Neander Selvan!

Advertisements