மாயப்பெண்

பெண்ணே!
நான் நினையாமல்
நித்தமும் வந்து
முத்தமிட்டுச் செல்கின்றன
உன் நினைவுகள்..

யாரடி நீ?
சொல்லாமல் வந்து
சொந்தம் கொண்டாடுகிறாய்..
விடாமல் தொடர்ந்து
வந்து மாயங்கள் செய்கிறாய்..

தவிர்க்க நினைத்தாலும்
இருதய அறையை
தட்டிப் பார்க்கிறாய்..

இமை மூடினாலும்
பிரித்து வைத்து
கதை பேசுகிறாய்..

கொஞ்சம் கொஞ்சமாக
கரைத்து விட்டாயடி
என் மனதை..

இது
நேசம் தானா
புரியவில்லையடி எனக்கு..
ஆனால்,
இருதயத்தில் புது
வாசம் வீசுதடி..

நான் நினையாமலேயே
நித்தமும் உன்னை
நினைக்க வைத்துவிட்டாயடி
மாயப் பெண்ணே!

—– ஆர்த்தி ரவி

Advertisements