மமதை

உன்னை காதலிக்க
இந்த ஒரு மனம் போதும்..
ஆனால்,
ஆண் என்ற உன் மமதையை
அடக்க இந்த ஜென்மம் மட்டுமல்ல
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் முடியாது..
அழுவதற்காக வாழ்க்கையை
அமைத்துக் கொள்வதைவிட
நிம்மதியாக வாழ நினைத்து
இந்த ஒரு மனம்
உன் காதலை மறுக்கச் சொல்கிறது!

— ஆர்த்தி ரவி

 

Advertisements