மை விழிக்கடல்

 

உன்

மை பூசிய விழிகள்
மெய் பேசுவது எப்போதடி?

உன்
உதடுகளில் நிலவும் மௌனத்தை
ஒரு பொழுது மனம் ரசித்தாலும்,
விழிக்கடலில் மூழ்கி
தொலைந்து போகத் துடிக்கும்
பித்து பிடித்த
என் காதல் நெஞ்சம்
உன் மை விழிகள் சிந்தும்
பொய்மையை வெறுக்குதடி..

நீ
மௌனமாகவே இருந்து கொள்ளடி
மாயக்காரி…

ஆனால்,
உன் மை விழிக்கடலில் மட்டும்
நான் நீந்த அனுமதி
தந்து விடடி என் மச்சக்காரியே!

—– ஆர்த்தி ரவி

Advertisements