விந்தையானக் காதல்

வெற்றியை மட்டும் சந்தித்து வந்த நான்
தோல்வியைத் தழுவியது உன்னில் தான்..

நெஞ்சம் முழுவதிலும் ரணம்..
காதல் ஏமாற்றம் தரும்..
இந்தளவுக்கு வேதனையைத் தருமா?

சீய்ப் போ என
உதறித்தள்ள சொல்கிறது
பாடங்களைக் கற்ற
எனது மூளை..

செருப்படி பட்டாலும்
உனது காலடியில்
தஞ்சம் அடைகிறது
பேதை உள்ளம்..

காரணங்கள் இல்லாமல்
வெறுப்பைப் பொழியும் உன் மீது
கொள்ளைக்காதல் வரக் காரணம்?

இந்தக் காதல்.. ஒரு விந்தையே!

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements