கவிதை தவிப்பு

உயிரே,
கவிதை எழுதச் சொல்கிறாய்..
எப்படி, எதில் எழுதுவது
என்று புரியாமல் தவிக்கிறேன்..

கவிதை என்றாலே
கண்முன் வந்து
கலங்கடிக்கிறாய்..

கவிதையின் கருவாய்
அருகில் உரசிக்கொண்டு
வடிவாய் நிற்கிறாய்..

நான் எழுத துடிக்கும்
பல கவிதைகளும்
தெறித்துக்கொண்டு வருகின்றன..
ஆனால்,
அவை எழுதப்பட வேண்டியது
உன்னில் அல்லவா?

கவிதை எழுதுவதில்
எனக்கு தோன்றும்
குழப்பமும் தயக்கமும்
உனக்கு இப்போது
புரிகிறதா ஆருயிரே?

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements