இதயமே

உறுதியாய் இதயம்
நுழைந்து விட்ட பின்பும்
உனக்கு ஏன் சந்தேகம்
அன்பே?

உனது அருகாமையில் மட்டுமே
முகமும் அகமும் மலர்கிறது..
உன் சுவாசத்தை
உணரும் போது மட்டுமே
நானும் சுவாசிக்கிறேன்
என்பதை உணர்கிறேன்..

நீயின்றி போனால்
நானும் மரித்திருப்பேன்..
சந்தேகமின்றி
சிந்திப்பாயா இதயமே?

—– ஆர்த்தி ரவி

 

 

Advertisements