தாபம்

ஏதோ செய்கிறாய் நீ
ஏனோ கோபம் வரவில்லை
உன் மேல் பெண்ணே!

என்றோ ஒரு நாள் பார்த்தேன்
அன்றிலிருந்து என்
எண்ணங்களை சரடு போல் திரிக்கிறாய்..

காதல் என்றால்
காத தூரம் ஓடுபவனை
கற்பனையிலும்
காதலிக்க வைக்கிறாய்..

நீ நெய்த காதல்
இதயத்தில்
பட்டுப் பூக்களை விரித்து
மென்மையாக ஸ்பரிசிக்க..

நின் பட்டுக் கன்னங்களும்
ரோஜா உதடுகளும்
என்னை முத்தமிட
அழைப்பு விடுத்து சிரிக்க..

உன் விழிகளில்
காணும் மின்னல்
போதையின் உச்சத்திற்கு
என்னை இட்டு செல்கிறதடி..

உறக்கமற்ற இரவுகளின் முடிவில்
பொய்யாகவேனும் உன் மேல்
சீறிப்பாய நினைக்கிறேன்..

சிரித்து வைத்து
காதல் பித்தம்
ஏற்றி விடுகிறாய்..

கோபம் வரவில்லை பெண்ணே
உன் மேல், மாறாக
தாபம் எழுகிறது கண்ணே!

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements