மொழி

 

மொழிகளில் சிறந்த மொழி
நீ பேசும் மொழியே…

நீ வாய்ப்பூட்டுடன்
நின்றாலும்
உன் மௌனம் பேசும்
உன் விழிகளின் வழி…

அந்த பேசும் பார்வைகள்
சொல்லும் கதைகளின்
அர்த்தத்தில் பல முறை
தொலைந்து போய் என்
இதயம் மீளுதடி…

மௌனத்தை உடைத்து
அரிதாய் உதிரும்
ஓரிரு வார்த்தை வரிகளின்
மென்மையில் சிக்கி
சொக்கிப் போன என்
உயிரும் உன் வசமானதடி…

உன்னை போல்
உன் மொழியும்
நான் கண்ட
அதிசயமடி பெண்ணே!

***** ஆர்த்தி ரவி

Advertisements