முத்தம்

 

பழமையும் புதுமையும்
கலந்த கவிதையடி நீ..

பல நூறு முத்தங்களை
புறங்கையில் இட்டாய்..

உதட்டுச்சாயம் பூசாமலேயே
சிவந்து கிடக்கும் உன்
தேனூறும் இதழ்களால் சிறு
தீண்டலாகவேனும் ஒற்றை
முத்தத்தை என்
உதடுகளில் வைத்தால் என்னடி?

நம் உதடுகளும்
பிரத்தியேகமாக
பேசிக் கொள்ளட்டுமே?

தீண்டல்..
தூண்டி விட்டுவிடும்
என்ற பயமா?

பயம் வேண்டாம்
கண்மணி
காலம் கனிந்திட
காத்திருப்பேன் நாமாக..

இப்போது,
புதிய கவிதை ஒன்றை மட்டும்
இதழ்களில் எழுதிட
பெண்பூவே நீ அருகில் வா..
~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements