கோகிலா Ko 2 Lyrics & Video

கோகிலா

Movie Ko 2

Music Leon James

Lyrics Karki
Year 2016
Singers Leon James, Neeti Mohan

Kohila Kohila Lyrics

ஹே விழியே, எனைப் பார்க்காதே!
ஹே அழகே, இனிப் பேசாதே!
அலை போலப் பாயும் உன் பார்வை,
அணை போலே இமை ரெண்டும்,
உடைந்தால் நனைவேனே…!!
புயல் காற்றைப் போல உன் சொற்கள்,
சிறு ஜன்னல் இதழ் ரெண்டும்
திறக்காதே… தொலைவேனே…!!

கோகிலா கோகிலா,
மின்னல்கள் உன்னாலா..!
கோகிலா கோகிலா,
மாயங்கள் உன்னாலா..!
கோகிலா கோகிலா,
என் பூமி கீழ்மேலா..!
கோகிலா கோகிலா,
எல்லாம் உன் சொல்லாலா..!!

ஹே விழியே, எனைப் பார்க்காதே!
ஹே அழகே, இனிப் பேசாதே…!

கோடையில் ஓடையில், கால்கள் ரெண்டை நனைக்கும்
சுகமானாய் நீயே..!
கோவிலின் கோபுரம், பேசிடும் பூ நிழலாய்
எனதுடலில் நீ ஆனாயே..!

கோதை உந்தன் கைகள்
கோதிப் போகும்போது,
கோபம் தீர்ந்து தீயாய் ஆனேன்..!
கோடிப் புள்ளி வைத்த கோலம்
என்னைக் கோர்க்கும் கோடாய் ஆனாயே..!

கோகிலா கோகிலா,
மின்னல்கள் உன்னாலா..!
கோகிலா கோகிலா,
மாயங்கள் உன்னாலா..!
கோகிலா கோகிலா,
என் பூமி கீழ்மேலா..!
கோகிலா கோகிலா,
எல்லாம் உன் சொல்லாலா..!!

ஹே விழியால், உனைப் பார்த்தேனோ!
ஹே உயிரே, மனம் சொன்னேனோ!
அலை போலப் பாயும் என் நெஞ்சம்,
அணை போலே உன் கைகள்,
அணைத்தால் அடைவேனே..!!
புயல் காற்றைப் போல என் ஆசை
இதழ் ஜன்னல் வழி சென்று,
உனக்குள்ளே தொலைவேனே..!!

கோகிலா கோகிலா,
மின்னல்கள் என்னாலா .!
கோகிலா கோகிலா,
மாயங்கள் என்னாலா ..!
கோகிலா கோகிலா,
உன் பூமி கீழ்மேலா..!
கோகிலா கோகிலா,
எல்லாம் என் சொல்லாலா..!!

கோகிலா…………….!
கோகிலா…………….!

கோகிலா…………….!

– from Tamil paa (Thanks!)

 

Advertisements