தேடல்

நான் நீயாக
நீ நானாக
மாறிய நாள் தொட்டு
மனதில்
ஒரே கேள்வி
இருவரும் நாமாவது எப்போது?

கேள்விக்குறியாகிக் கிடக்கும்
நம் காதல்
நாமானாலும்,
நம் காதலின் தேடல்
தொடர் புள்ளியாக
தொடர வேண்டும்..

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements