பொத்தி வச்ச Song Lyrics & Video

திரைப்படம்: மண் வாசனை   இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஜானகி, SPB

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசிப் பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசிப் பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே.. ஆஹா
ரொம்ப நாளானதே…ம்ஹீம்..

மாலை இளங் காத்து
அல்லியிருக்கு
தாலி செய்ய நேத்து
சொல்லியிருக்கு
இது சாயங்காலமா
மடி சாயும் காலமா
முல்லைப் பூச்சூடு
மெல்லப் பாய் போடு
அட வாடைக் காத்து சூடு ஏத்துது

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசிப் பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

ஆத்துக்குள்ள நேத்து
ஒன்ன நெனச்சேன்
மித்த நேரம் போக
மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா
அது கூடாது
இது தாங்காது
சின்னக் காம்புதான பூவத் தாங்குது

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசிப் பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே
ஆளானதே
ரொம்ப நாளானதே

Advertisements