ஓசையின்றி காதல்

நீ,
அருகில்
நிற்கும் போது,
அன்பே
உன்னிடம்
விளையாட்டாக சீண்டிப்
பார்க்க தோன்றுகிறது..

நீ,
தொலைவில் போனதும்
தொலைந்து போன
நிமிடங்களுள்
தொலைத்து விட்ட
கன்னியமான
காதல் கனவுகளை
எண்ணிப் பார்ப்பது
வாடிக்கையாகி போனது..

நாளை உனை
காணும் வேளை
பெண்ணே,
ஓசையின்றி
காதலித்து விடலாம்
கன்னியமாக..

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements