அமாவாசை

அமாவாசை

வெண்ணிலவுக்கும் எனக்கும்
நின்மதி தருவது
அமாவாசை இரவு..

வான்நிலவை பார்த்ததும்
நித்தமும் எனை
ஆக்கிரமிக்கும் உன் நினைவுகள்..

ஓயாமல் நான் தவிக்கும்
அவஸ்தையான இரவுகளை பார்த்து,
உன் நினைவுகளை என்னில்
தற்காலிகமாகவேனும் விடுதலை செய்ய
ஓய்வெடுத்துக் கொள்கிறதோ வெண்ணிலவு
அமாவாசை இரவில்?
~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements