சவால்

நம்மிடையேயான மைல்கற்கள் விடும்
சவால்களை தகர்த்தெறிய முடியும்
என்னால், மிக எளிதாய் பெண்ணே!

மௌனம் காக்கும் உன்
மாதுளை நிற இதழ்கள்..
மோதிப்பார் என சவால் விடுகிறதே?

மோதினால் என் இதழ்கள்
மட்டுமல்ல.. இதயமும்
உன்னிடம் தோற்று நிற்கும்..

சுகமே என்றாலும்
இந்தக்காதல் உன்
சம்மதத்தோடு கூட வேண்டும்..

அதுவரை..
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்..
காதலோடு காத்திருக்கும் உன்னவன்!

~~~~~ ஆர்த்தி ரவி

 

Advertisements