கண் மூடி திறக்கும் போது Song lyrics & Video

Movie : Sachin  Music : Devi Shree Prasad
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் என்கின்றேன்…
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்…

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..
உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..
இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காதல் இதுவா..
(கண் மூடி திறக்கும் )
வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண் அடிக்கும்…
வீடு செல்ல சூரியனும் அடம் பிடிக்குமே..
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே..
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாத நெஞ்சம் எனது..
பூ ஒன்று மோதியதாலே ஓ ஓ பட்டென்று சரிந்தது இன்று..
( கண் மூடி திறக்கும்)

Advertisements