தீராதது காதல் தீர்வானது – அறிமுகம்

ஆர்த்தி ரவியின் “தீராதது காதல் தீர்வானது”

அறிமுகம்

‘தீராதது காதல் தீர்வானது’ எனும் தலைப்பில் அடுத்தக் கதையுடன் தங்களைச் சந்திக்க மிக ஆவலாக வந்திருக்கிறேன்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா? தெரியவில்லை.. ஆனால், ஒரு திருமணத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வெறும் உடல் கூடல் அல்லாமல் இரு மனங்கள் சங்கமிக்க வேண்டும்.

காதல், புரிந்துணர்வு – இவை இரண்டும் திருமண வாழ்க்கைக்கு மிக அவசியம். தங்கள் இணையைப் பற்றிப் புரிந்து கொண்டு இயன்ற அளவு விட்டு கொடுத்து போகும் தம்பதிகளுக்குத் திருமண வாழ்வு இனிதாகவே அமைகிறது.

இரு மனங்களின் சங்கமம் கேள்விக்குறியாகும் போது விளைவுகள்? இழப்புக்கள் யாருக்கு பெரிது?

இக்கதையின் நாயகி டானியா. நாயகனின் பெயரை நான் இப்போது சொல்லப் போவதில்லை. நீங்களே ஒன்றிரண்டு அத்தியாயங்களில் தெரிந்துகொண்டு விடுவீர்கள்.

டானியா எப்படி? அவள் தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்தது என்ன? அதைக்கொண்டு இனி வாழ்க்கையில் என்ன முடிவடுக்கிறாள்?

கதையின் நாயகன் எப்படிப்பட்டவன்? அவன் என்ன செய்யவிருக்கிறான்?

இவர்கள் இருவரைத் தவிர வேறு கதாப்பாத்திரங்களும் உண்டு. அவர்களில் உங்களுடைய favorite யாரெனக் கண்டிப்பாகக் கதையின் முடிவில் சொல்ல வேண்டும், சரியா?

அப்படித் தீராதது என்ன? யாருக்கு? தலைப்பிற்கான காரணம் கதையில் எனது எழுத்துக்கள் சொல்லுமா?

வாருங்கள்… வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நான் தொடர்ந்து எழுத தூண்டுகோலாய் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்ட முதல் கதையின் வாசகர்களுக்கும் மிக்க நன்றி!

என் புதிய பாதையில் பக்க பலமாக நிற்கும் என்னுயிர் உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் நன்றிகள் பல!

தங்கள் கருத்துகளைப் பதிவிட : arthyravistories@gmail.com , http://www.arthyravi.wordpress.com/readers-comments-தங்கள்-கருத்துக்கள்/

http://www.facebook.com/arthyravistories
அன்புடன்,
ஆர்த்தி ரவி

Advertisements