வெஜ் ஃப்ரைட் ரைஸ்/ Veg. Fried Rice

வெஜ் ஃப்ரைட் ரைஸ்/ Veg. Fried Rice

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 2 கப்
கேரட் – 2 {நிளவாக்கில் நறுக்கியது}
குடை மிளகாய் – 1 {பொடியாக நறுக்கியது}
பீன்ஸ் – 8 {பொடியாக நறுக்கியது}
பச்சை மிளகாய் – 3{நிளவாக்கில் நறுக்கியது}
பச்சை பட்டாணி – 1 கப்
வெங்காய தாள் – 1/2 கட்டு {பொடியாக நறுக்கியது}
பூண்டு – 7 பல் {மிக பொடியாக நறுக்கியது}
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
வினிகர் – 1 ஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் – 2 ஸ்பூன்
உப்பு, நெய் – தேவையான அளவு.

அரிசியை நன்றாக கழுவி ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு அகண்ட பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அரிசியை வேக விடவும். முக்கால் பதம் வெந்தவுடன் நீரை வடிகட்டி ஆற விடவும்.
ஒரு அகண்ட பெரிய கடாயில் நெய் விட்டு நன்கு சூடானதும் பூண்டு சேர்த்து நன்கு வதங்கும் வரை வறுக்கவும்.
இதனுடன் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஒரு கரண்டி சக்கரை சேர்த்தால் காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும். காய்கறிகள் வதங்கியவுடன் சோயா சாஸ், வினிகர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இவற்றோடு வேக வைத்த அரிசி மற்றும் வெள்ளை மிளகு பொடி சேர்த்து நன்றாக கலந்து 2 அல்லது 3 நிமடங்கள் வதக்கவும்.
வெங்காய தாள் சேர்த்து, தக்காளி சாஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான கிரவியுடன் பரிமாறலாம். உங்கள் சுவையான ஃப்ரைட் ரைஸ் ரெடி.
Ingredients:

Basmati rice – 2 cups
Carrot – 2 chopped
Capsicum – 1 chopped
Beans – 8 finely chopped
Green chilly – 3 {slit into 2}
Green peas – 1 cup
Spring onion – 1/2 bunch {finely chopped}
Garlic cloves – 7 {finely chopped}
Soya sauce – 2 spn.
Vinegar – 1 spn.
White pepper powder – 2 spn.
Salt & Ghee – as required.

Rinse & soak the rice for about 20 min. & cook in lots of water adding little oil. When 3/4 of rice is cooked, drain the water & allow it to cool.
In a broad kadai, heat some ghee in high flame, add the chopped garlic cloves & saute until it is fried.
Add all the chopped veggies & saute for 2 to 3 min. Add 1 spn. sugar so that it keeps the veggies color intact. When the vegatables are lightly cooked add soya sauce, vinegar & salt & stir well. Finally add the rice & white pepper powder mix well & fry for 2 to 3 min.
Garnish with chopped spring onions & serve hot with tomato sauce or any gravy of your choice. Your delicious fried rice is ready.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s