கண்ணோடு கண்ணோடு வந்த காதல் (Song lyrics & video)

இனிமையானதொரு பாடல்..

படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஷோபனா

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக
(கண்ணோடு..)

அன்பே அன்பே உன் ஆடை கொடு
உன் திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே உன் திரை விளக்கு
கண் நினைவுகள் மலரட்டுமே
உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா
உன் கண் மணியில் என் காலம் விடியாதா
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா
உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்க வில்லையா
(கண்ணோடு..)

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு
உன் நிழலுக்குள் கரைந்துவிடு
பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு
உன் நேசம் தான் என் வாழ்வின் ஆகாயம்
உன் நெஞ்சில் நால் இல்லாமல் என்னாகும்
நாளே..
நாம் சேர்ந்து ஒன்றாகட்டும்
உயிரே மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்
(கண்ணோடு..)

Advertisements