புத்தாண்டு

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உருண்டோடி மறைந்த வருடங்கள்
வாழ்வின் பல அர்த்தங்களை
காட்டிப் போயின..

நல்லவையோ கெட்டவையோ
நடந்தவை அனைத்தும்
நன்மைக்கே என நம்புவோம்.

விழிகளில் ஆர்வமும்
மனதில் எதிர்பார்ப்புமாய்
விழித்தெழுந்த இந்நாளில்
புது வருடமும் தொடங்கி விட்டது..

வாழ்வியலில் இன்றியமையாத பண்புகள்
பல இருப்பினும்,
பிறரிடம் அன்பு செலுத்துவதும்
மனிதநேயம் கொண்டு வாழ்வதும் அவசியம்..

நாமும் கடைப்பிடிப்போம் நற்பண்புகளை மட்டுமே..
வரும் நாட்களை மகிழ்வுடன் எதிர்கொள்வோம்!
~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements