காற்றோடு ஓர் இதயம்

காத்திருந்தேன் காதலோடு
எதிர்பார்த்ததென்னவோ உன்னைத்தான்
என் மனதிற்கினிய அத்தானே..

ஆனால், நீ வரவில்லை
கடைசி வரை வரவேயில்லை…

அவன் வந்தான்
உனக்குப் பதிலாக..
உன் இடத்தை நிரப்ப..

எனக்கு அவனைப் பிடித்தாலும்
எப்படிக் காதல் வரும்?

காதல் செய்ய இதயம் வேணுமே..
என் இதயம் தான்
காற்றோடு கலந்துவிட்ட
உன்னில் இருக்கிறதே!

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements