அவனும் நானும்

அவனும் நானும்…

காதலர்தினமும் ரோஜாவும்
ரோஜாவும் மலரும்
மலரும் வண்டும்
வண்டும் ஆணும்
ஆணும் பெண்ணும்
பெண்ணும் மென்மையும்
மென்மையும் இருதயமும்
இருதயமும் இதமும்
இதமும் தென்றலும்
தென்றலும் வருடலும்
வருடலும் பார்வையும்
பார்வையும் இமையும்
இமையும் விழியும்
விழியும் மொழியும்
மொழியும் தமிழும்
தமிழும் தமிழனும்
தமிழனும் விருந்தோம்பலும்
விருந்தோம்பலும் விருந்தும்
விருந்தும் இனிப்பும்
இனிப்பும் தித்திப்பும்
தித்திப்பும் உதடுகளும்
உதடுகளும் உரசல்களும்
உரசல்களும் உடலும்
உடலும் உயிரும்
உயிரும் சுவாசமும்
சுவாசமும் நேசமும்
நேசமும் காதலும்
காதலும் கவிஞரும்
கவிஞரும் கவிதையும்
கவிதையும் எண்ணமும்
எண்ணமும் எழுத்தும்
எழுத்தும் ஏழ்மையும்
ஏழ்மையும் ஏக்கமும்
ஏக்கமும் தேடலும்
தேடலும் வெற்றியும்
வெற்றியும் பரிசும்
பரிசும் மகிழ்ச்சியும்
மகிழ்ச்சியும் சிரிப்பும்
சிரிப்பும் குழந்தையும்
குழந்தையும் ஆரவாரமும்
ஆரவாரமும் கடலும்
கடலும் அலையும்
அலையும் கரையும்
கரையும் காதலர்களும்
காதலர்களும் காதலும்
காதலும் மோதலும்
மோதலும் மௌனமும்
மௌனமும் ஊடலும்
ஊடலும் கூடலும்
கூடலும் மோகமும்
மோகமும் முத்தமும்
முத்தமும் சிலிர்ப்பும்
சிலிர்ப்பும் சிணுங்கலும்
சிணுங்கலும் அகல்விளக்கும்
அகல்விளக்கும் கார்த்திகையும்
கார்த்திகையும் மழையும்
மழையும் இடியும்
இடியும் மின்னலும்
மின்னலும் மேகமும்
மேகமும் வானமும்
வானமும் பால்நிலவும்
பால்நிலவும் பகலவனும்
பகலவனும் அவனும்
அவனும் நானும்!!

~~~~~ ஆர்த்தி ரவி

#அவனும்நானும்

Advertisements

One thought on “அவனும் நானும்

Comments are closed.