விழி வாசலா.. இதழ் வாசலா?

பேசாமல் பேசும் உன் கண்கள்..
பிரியாமல் பிரியும் உன் உதடுகள்..
இவற்றில் எது சிறந்தது
எனக் கேட்கிறாய்..
என்னடி சொல்வேன்?

எனைக் கண்டு காதலை
முதலில் சொன்னது உனது விழிகள்…
எனை ஈர்த்து மோகத்தை
அறிமுகம் செய்தது உனது இதழ்கள்…
விழி வாசலா.. இதழ் வாசலா?

ஒன்றை மட்டும் தேர்வு செய் என்கிறாய்…
அப்படி என்றால்
அவ்விரண்டினையும் விடுத்து
உன் இதய வாசலை
தேர்வு செய்கிறேனடி…

இதயம் நுழைந்து
உனது இதழ் வாசலை அடைகிறேன்
உரிமையுள்ள குத்தகைக்காரனாக…

கள்ளம் கற்பிக்கும்
உனது கண்களில் விலங்கிட்டு
நம் காதலுக்கும் பாதுகாவலன் ஆகிறேனடி…

பேசும் உன் கண்களும்
பிரியும் உன் உதடுகளும்
என்றும் எனதே!

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements