கார குழம்பு / Kara Kuzhambu

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1
தக்காளி – 2
கத்தரிக்காய் – 2
பூண்டு – 8
பச்சை மிளகாய் – 2
புளி – 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்

அரைத்து கொள்ள:

கசகசா – 2 ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/4 கப்

எண்ணெய் விடாமல் கசாகசா மற்றும் வெந்தயத்தை வறுத்து துருவிய தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரிந்த வெங்காயம், ரெண்டாக அரிந்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து ரெண்டு நிமிடம் வதக்கவும்.
இதனுடன் புளி கரைசல் விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கிண்டி விடவும்.

கத்தரிக்காய் வெந்தவுடன் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு வேக விடவும். குழம்பு கொதித்தவுடன் கொஞ்சம் பெருங்கயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். கார குழம்பை சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Ingredients:

Onion – 1
Tomato – 2
Brinjal – 2
Garlic cloves – 8
Green chilly – 2
Tamarind – 1 lemon size
Turmeric powder – 1 spn.
Chilly powder – 1 spn.
Sambhar powder – 1 spn.

To grind:

Poppy seeds/Khus khus – 2 spn.
Fenugreek seeds – 1/2 spn.
Grated coconut – 1/4 cup

Dry roast the fenugreek seeds & poppy seeds, grind into a fine paste adding the grated coconut & keep it aside. Heat the kadai, add oil & temper with mustard seeds & urad dhal, add chopped onions, garlic cloves & slit green chillies & saute for 2 min. Then add chopped tomatoes & brinjals & saute for another 2 min.

Now add the tamarind juice, turmeric powder, chilly powder & sambhar powder & stir well. Once the brinjal is cooked add the finely ground paste with required salt & water. When the kuzhambu starts to boil add a pinch of asafoetida powder & curry leaves & turn off. Serve hot with rice.

Advertisements