பெண் மேகம் போலவே (Song lyrics & video)

Pen Megam Polave
Movie : Kathai Thiraikathai Vasanam Iyakkam
Singers : G.V.Prakash Kumar, Saindhavi
Music : Sharreth
Lyrics : Na.Muthukumar

பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
குளிர்ந்திட முத்தம் தந்தாய்
மழையென நானும் வீழ்ந்தேன்
நுரைத்திடும் கடலாய் மீண்டும்
அலைந்துன்னை தேடி வந்தேன்

இசையாலே காதல் ஜிவியாகும் சைந்தவியே
பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
விடியும் முன்னே உன்னை நிலவாய் நான் ரசிப்பேனே
கனியும் முன்னே என்னை பறித்தால் நான் சிலிர்ப்பேனே
அடி என்னை இயக்கிடும் சுவாச காற்று நீயடி
என் கண்கள் பேசிடும் கதைகள் ஓராயிரம்
அதை சொன்னால் வெல்வேனே
பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
அழகில் என்னை வென்றாய் அடடா நீ தேவதையா
அன்பில் என்னை கொன்றாய் ஐயோ நீ ராட்சசியா
மலர் கொள்ளை போலவே மனதை கொண்டு செல்கிறாய்
அதை கண்டு கொள்கையில் கம்பி நீ எண்ணுவாய்
விடுதலையே வேண்டாமே
பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
குளிர்ந்திட முத்தம் தந்தாய்
மழையென நானும் வீழ்ந்தேன்
நுரைத்திடும் கடலாய் மீண்டும்
அலைந்துன்னை தேடி வந்தேன்

இசையாலே காதல் ஜிவியாகும் சைந்தவியே

 

Advertisements