மேக ராகமே மேள தாளமே.. Palindrome Song lyrics & video

Movie : Vinodhan

Music : Imman

Lyrics : Madhan Karky

Singers : Haricharan & Sasha

Madhan Karky’s Palindrome Song ❤🎶🎵🎶❤
மேக ராகமே
மேள தாளமே
தாரா! ராதா!
கால பாலகா
வாத மாதவா
ராமா! மாரா!
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா?
தோணாதோ…?
கான கனகா…
மேக ராகமே
மேள தாளமே
தாரா! ராதா!
கால பாலகா
வாத மாதவா
ராமா! மாரா!
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா?
தோணாதோ…?
கான கனகா…
வான கனவா?
வாச நெசவா?
மோகமோ…
மோனமோ…
பூ தந்த பூ!
தீ தித்தி தீ!
வா கற்க வா!
போ சீச்சீ போ!
தேயாதே….
வேல நிலவே!
மேக ராகமே
மேள தாளமே
ராமா! மாரா!
சேர அரசே
வேத கதவே
நேசனே
வாழவா
நீ நானா நீ?
மா மர்மமா?
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதே..
மேக முகமே
மேக ராகமே
மேள தாளமே
தாரா! ராதா!
கால பாலகா
வாத மாதவா
ராமா! மாரா!
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா?

Advertisements