நெஞ்சே நெஞ்சே (Song lyrics & video)

Movie : Yaan

Music: Harris Jayaraj

Lyricist: Kabilan

Singers: Chinmayi, Unnikrishnan

 

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே
தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
வெறும் பூவும் வெர் என்று சொல்லாதே
காதல் அருகே இல்லை அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தா போனேன்
இறந்தா போனேன் வருவேன் ஓர் தினமே

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே

பூவைத் தொட்டு வந்தாலும்
கையில் வாசம் விட்டுப் போகாதே
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ

கண்ணை மூடி தூங்க வேண்டும்
ஆடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தோளில்

என்னை விட்டு நான் போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை
தவியாய் நான் தவித்தேன்
காதல் கனவில் உன்னை முழுதாய் காண
பிறையாய் நான் இளைத்தேன்

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே

Advertisements