தீராதது காதல் தீர்வானது bits

அடுத்த அப்டேட்டின் மினி பிட்…. 👩🏻‍💻😊 உங்கள் ரியாக்‌ஷன் தெரிஞ்சு கொள்ள ஆவல் மக்களே!! 🤔🤔🤔😬😬😬😀
❤️❤️ தன் அருகில் படுத்திருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான் ஆரியன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் டானியா. அவளருகில் உருண்டு நெருங்கிப் படுத்தவனுக்கு இது கனவே என்று தோன்றிக் கொண்டே இருந்தது. 
அசைவில்லா அசந்த தூக்கத்திலும், பால் வண்ண லில்லி மலராய் மலர்ந்திருந்த முகத்தில் தெரிந்தது மகிழ்ச்சிக்கு அத்தாட்சியாய் இதழோரப் புன்னகை. அவன் கண்ணில் பட்ட அவளின் வெண் கழுத்தை அலங்கரித்த பொன் தாலி இவனைவிட அதிக உரிமையுடன் அவளது மார்பில் ஊர்ந்தது. 
அவளின் சீரான சுவாசம் சூடாக அவனைத் தீண்டி, ‘இது கனவல்ல மடையா.. நிஜமே!’ என உறுதிப்படுத்தியது. ஆரியனின் நினைவுகளும் சற்று பின்னோக்கி நகர்ந்தன… ❤️❤️

Advertisements