உனக்கே உயிராகினேன்

இனிய வணக்கம் தோழமைகளே!

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத செயல்களைச் செய்வது தான் மனித இயல்பு (?)

இந்தச் சில மணித்துளிகளில் அப்படித் தான் நடந்துவிட்டது. திடீரெனத் தோன்றிய கதை தலைப்பு, கதைக்கரு. உதித்த உடனே உங்களிடம் தலைப்பை பகிர்ந்தேன். வரவேற்று நன்றாக இருக்கிறது எனச் சொன்ன அனைவருக்கும் நன்றி!

அதே உற்சாகத்தில் கதையின் அறிவிப்புடன் ஓர் அறிமுக டீசர்.
நாயகன், நாயகி மட்டும் வந்திருக்கிறார்கள்.

(தீராதது காதல் தீர்வானது கதை முடிவை நெருங்கி விட்டது. அக்கதை முடிந்ததும் தான் மற்ற கதைகளின் பதிவுகள் வரும். விலகிடுவேனா இதயமே,
அதில் அடக்கம்)

🌼🌼 உனக்கே உயிராகினேன் 🌼🌼

நாயகன் ❤️ ஹரி கிருஷ்ணன்
நாயகி ❤️ தேன்மொழி

பிடிச்சிருக்கா ப்ரண்ட்ஸ்?

இதோ டீசர்…

🌸🌺🌸🌺🌸
சுத்தி வளைக்காமல் நேரிடையாகவே பேச்சுக்கு வந்தான். தன் மனதில் தோன்றியிருந்த எண்ணத்தை அவளிடம் வெளியிட்டான்.

“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு தேன்மொழி.”

“பட், எனக்கு உங்களைப் பிடிக்கலை ஹரி கிருஷ்ணன். உங்களை மட்டுமில்லை, யாரையும் பிடிக்

நான் உன் கிட்ட கேட்கலியே என்னைப் பிடிச்சிருக்கான்னு. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம். உன்னைப் பிடிச்சதால்.
த்தை உனக்குத் தெரிவிச்சேன். அவ்ளோ தான். சிம்பிள்.”

“என்ன சிம்பிளா சொல்லீட்டீங்க, அவ்ளோ தான்னு? ஒரு கல்யாணத்திற்கு ஆண் மட்டும் விருப்பம் தெரிவிச்சா போதுமா?”

“இல்லை தான். நானும் என் சம்மதம் மட்டும் போதும்ன்னு எப்போ சொன்னேன் தேன்மொழி?”

“ஹய்யோ குழப்புறீங்க என்னை”

‘அது தானே எனக்கு வேணும் ஹனி. அப்போ தான் நீயே என்னை மேரேஜ் பண்ண சம்மதிப்பாய். குழம்பின குட்டையில் மீன் பிடிப்பது போல்.’

மனதிற்குள் நினைத்த ஹரி கிருஷ்ணன், வெளியே,

“ஹஹ்ஹஹ்ஹா”, எனச் சிரிப்பை வீசினான்.

மிகவும் வசீகரமான சிரிப்பு. நியாயப்படி தேன்மொழியைக் கவர்ந்திருக்க வேண்டும். ஏனோ அப்படி ஆகவில்லை.

ஹரி கிருஷ்ணன், ஆள் பார்க்க செம ஸ்மார்ட் லுக்கிங். A handsome guy, the most eligible bachelor!

ஆனால், தேன்மொழியை அவன் வசீகரிக்கவில்லை. அவள் அனுமதித்தால் தானே முதலில் ஈர்ப்பு தோன்ற வழி வரும். இதயத்தையும் உணர்வுகளையும் இறுக்கி வைத்தால்?“எதுக்கு இப்ப இப்படிச் சிரிக்கறீங்க?”“தோ பார்றா ஹரி உன் ஹனியை. சிரிக்கிறதுக்கெல்லாம் காரணம் கேட்கிறாளே! எப்படிடா சமாளிக்கப் போற இவளை?”“ஹலோ ஹலோ! என்ன சொன்னீங்க, ஹனியா? This is too much at this moment!”“அப்போ வேற மொமெண்ட்ல வச்சுக்கலாம்னு சொல்றியா ஹனி?”கடைசி வரியை மிகச் சன்னக்குரலில் முணுமுணுத்தவனை விழிகள் தெறிக்கப் பார்த்தாள் தேன்மொழி.“என்ன.. என்ன பேசுறீங்க நீங்க. அதுவும் இப்படிப் பார்க்க வந்த இடத்தில்.”அவள் அப்படிச் சொன்னதும் சுவாரசியமாகப் பார்த்து வைத்தான் ஹரி கிருஷ்ணன்.முதல் முதலாகத் தேன்மொழியைப் போட்டோவில் தான் பார்த்தான். முதல் பார்வையிலேயே அவனை ஈர்த்திருந்தாள். ரதி, ரம்பை, இப்படி எந்த அடைமொழி தந்து வர்ணிக்கப்படும் அளவு பேரழகியல்ல.ஹரி கிருஷ்ணனுக்கு அவளைப் பிடித்துவிட்டது. அமைதியான அழகு. ஆர்ப்பாட்டமற்ற தோற்றம். நல்ல பெண். இது தான் அவன் கணிப்பு. எப்படியும் மணமுடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தான்.🌸🌺🌸🌺🌸நன்றி!ஆர்த்தி ரவி

Advertisements

2 thoughts on “உனக்கே உயிராகினேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s