அன்பே அன்பே என் கண்ணில் நீ தானே (Song lyrics & video)

படம் : உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

சிலுவை சுமந்தானே
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்று
வார்த்தையில் வாய் வலி சொல்வனா
இதயம் ஒருநாள் இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடி போ

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

முள்ளாய் நீ வந்தால்
கண்களை திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணை கொலைதான் செய்யாமல் சென்றாய்
மலர்மாலாய் மாறிடவே நினைதேன்

மலர்வலயமாய் நான் மாறினேன்

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

 

 

என்னோடு வா வா (Song lyrics & video)

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக்
வரிகள் : நா. முத்துக்குமார்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு வா வா என்று
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்க தானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் தீயாக பார்காதடி
சின்ன பிள்ளை போல நீ அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு வா வா என்று
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கனமே
காதல் அதை பொறுக்கனுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நெஞ்சே நெஞ்சே (Song lyrics & video)

Movie : Yaan

Music: Harris Jayaraj

Lyricist: Kabilan

Singers: Chinmayi, Unnikrishnan

 

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே
தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
வெறும் பூவும் வெர் என்று சொல்லாதே
காதல் அருகே இல்லை அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தா போனேன்
இறந்தா போனேன் வருவேன் ஓர் தினமே

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே

பூவைத் தொட்டு வந்தாலும்
கையில் வாசம் விட்டுப் போகாதே
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ

கண்ணை மூடி தூங்க வேண்டும்
ஆடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தோளில்

என்னை விட்டு நான் போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை
தவியாய் நான் தவித்தேன்
காதல் கனவில் உன்னை முழுதாய் காண
பிறையாய் நான் இளைத்தேன்

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே

மேக ராகமே மேள தாளமே.. Palindrome Song lyrics & video

Movie : Vinodhan

Music : Imman

Lyrics : Madhan Karky

Singers : Haricharan & Sasha

Madhan Karky’s Palindrome Song ❤🎶🎵🎶❤
மேக ராகமே
மேள தாளமே
தாரா! ராதா!
கால பாலகா
வாத மாதவா
ராமா! மாரா!
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா?
தோணாதோ…?
கான கனகா…
மேக ராகமே
மேள தாளமே
தாரா! ராதா!
கால பாலகா
வாத மாதவா
ராமா! மாரா!
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா?
தோணாதோ…?
கான கனகா…
வான கனவா?
வாச நெசவா?
மோகமோ…
மோனமோ…
பூ தந்த பூ!
தீ தித்தி தீ!
வா கற்க வா!
போ சீச்சீ போ!
தேயாதே….
வேல நிலவே!
மேக ராகமே
மேள தாளமே
ராமா! மாரா!
சேர அரசே
வேத கதவே
நேசனே
வாழவா
நீ நானா நீ?
மா மர்மமா?
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதே..
மேக முகமே
மேக ராகமே
மேள தாளமே
தாரா! ராதா!
கால பாலகா
வாத மாதவா
ராமா! மாரா!
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா?

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் (Song lyrics & video)

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உணைசேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா என் செல்லமே

மனசுக்குள்ளே வாசல் தெளித்து
உந்தன் பெயரை கோலம் போட்டு
காலம் எல்லாம் காவல் இருப்பேனே
உயிர் கரையிலே, உன் கால் தடம்
மனசுவரிலே, உன் புகைப்படம்
உன் சின்ன சின்ன, மீசையினை
நுனி பல்லில் கடிதிளுப்பேன்
உன் ஈரம் சொட்டும், கூந்தல் துளி
தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்
என் மேலே பாட்டு எழுந்து
உயிர் காதல் சொல் எடுத்து
நம் உயரை சேர்த்தெடுத்து
அவன் போட்டான் கையெழுத்து
(எத்தனை ஜென்மம் )

உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
நீ பார்கிறாய், நான் சரிகிறேன்
நீ கேட்கிறாய் ,நான் தருகிறேன்
நீ வீட்டுக்குள்ளே, வந்ததுமே
உன்னை கட்டிப்பிடித்து கொள்வேன்
நீ கட்டிக்கொள்ள, உன்னை மெல்ல
மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்
நான் மறுப்பேன் முதல் தடவை
தலை குனிவேன் மறு தடவை
நான் பெறுவேன் சிறுதடவை
பின்பு தருவேன் உன் நகலை
(எத்தனை ஜென்மம் )…

நெஞ்சில் ஜில் ஜில் (Song lyrics & video)

படம்: நெஞ்சில் ஜில் ஜில்
இசை: D இமான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி

நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்
அழியாது காதல்

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னைக் காண்கிறேன்
ஆகாயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாதச் சுவடு

தீராத தேடல் இது
தித்திக்கும் தூறல் இது

(உனக்காகத்தானே…)
தேவதை போல வந்து காதல் இறங்கும்
அசரீரியாக நின்று பேசிச் சிரிக்கும்

புரியாது பெண்ணே
காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்
த ன னா ன னா த ன னா ன

வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்கோலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மானம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மானம் நிறைவேறும்

காதலின் ஆட்சிதானே நமக்கிங்கு வேண்டும்
பூமியைத் தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்

(உனக்காகத்தானே…)
காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

சலவைக்கல் சிலையே
பூஜிக்க வா
ரகசிய பூவாய்
தனனானனா

உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெட்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் சுவாசிக்க பிடிக்காது

பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே…)

நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்

கச்சேரி கச்சேரி கலை கட்டுதடி கண்ணால என்னை நீ பாத்தா (Song lyrics & video)

கச்சேரி ஆரம்பம் |

 

கச்சேரி கச்சேரி கள கட்டுதடி

கண்ணால என்ன நீ பார்த்தா…

உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுனா

யூத்தாக மாறுவான் தாத்தா…

ஓ… கரும்பு உடம்பு ருசிக்கும் எரும்பு

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்காதப்பா…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்காதப்பா…

உனக்குமட்டும் உயிர் இரண்டா…

உடம்ப கவ்வுரயே கரண்டா…

இது சரியா தப்பா…

மது போல மப்பா…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்காதப்பா…

கச்சேரி கச்சேரி கள கட்டுதடி

கண்ணால என்ன நீ பார்த்தா…

உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுனா

யூத்தாக மாறுவான் தாத்தா…

உன் நடைகாட்டி என்ன தலை ஆடி

பொம்ம போல மாத்திப்புட்ட…

நீயும் பலவாட்டி ஒரு படம்கட்டி

என் உசுர வாங்கிபுட்ட…

குறுக்க சிறுத்த கொலைகாரி…

ரசிக்க வாயேன்டி…

நொறுக்கு தீனி உன் மீச…

கடிக்க தாயேன்டா…

ஏ கஞ்ச செடி உடம்பழகி

கஞ்சமான இடை அழகி…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்குதப்பா…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்குதப்பா…

கச்சேரி கச்சேரி கள கட்டுதடா…

உன் முகம் பார்த்து

அட குளிர் காத்து

தினம் சூட மாறுதடா…

உன் நகம் பார்த்து

நான் தலை வார

அடி ஊரே கூடுதடி…

தெருவில் நடந்து நீ போனா…

ஜன்னல் வெக்கபடும்…

கோலம் போட நீ போனா…

புள்ளி ஜொள்ளு விடும்…

பஞ்சாமிர்த சிரிப்பழகா…

பஞ்சமில்ல கொழுப்பழகா…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்குதப்பா…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்காதப்பா…

—-

கச்சேரி கச்சேரி கள கட்டுதடி

கண்ணால என்ன நீ பார்த்தா…

உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுனா

யூத்தாக மாறுவான் தாத்தா…

உனக்குமட்டும் உயிர் இரண்டா…

உடம்ப கவ்வுரயே கரண்டா…

இது சரியா தப்பா…

மது போல மப்பா…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்குதப்பா…

ஐய்யயோ பரபரப்பா…

மனசு தவிக்குதப்பா…

 

கண்ணை காட்டு போதும் (Song lyrics & video)

💘😘😍 Happy Valentine’s Day 😍😘💘

கண்ணை காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல
கொட்டுற ஆம்பளை
ஒட்டுறியே உசுர நீ நீ

நிச்சயமாகலா
சம்மந்தம் போடலை
எப்பவுமே உறவு நீ நீ

அன்புள்ள விதை விதைச்சு
என்னை நீ பறிச்சாயே …

கண்ணை காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல
கொட்டுற ஆம்பளை
ஒட்டுறியே உசுர நீ நீ

நிச்சயமாகலா
சம்மந்தம் போடலை
அப்பவுமே உறவு நீ நீ

அன்புள்ள விதை விதைச்சு
என்னை நீ பறிச்சாயே …

நெஞ்சுல பூமழைய
சிந்துற உன் நினைப்பு
என்ன தூக்குதே

எப்பவும் யோசனையை
முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே

வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதை நானும்
உன் வீட்டை வந்து சேருரன்

சிறு சொல்லுல உறியடிச்சு
என்னை நீ சாய்ச்ச
சக்கர வெயில் அடிச்சு
சட்டுனு ஓச்ச
றெக்கையும் மொளைச்சுடுச்சு
கேட்டுக்க கிளி பேச்சு…

கண்ணை காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

தொட்டதும் கைகளுள
ஒட்டுற உன் கருப்பு
என்னை மாத்துதே

ஒட்டடை போல என்னை
தட்டிடும் உன் அழகு
வித்தை காட்டுதே

தொல்லைகளை கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கலை
கட்டிவிடும் ஆசையால்
என் கண்ணு ரெண்டும் தூங்கலை

உன்னை கண்டதும் மனசுக்குள்ள
எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்லை
சூட்டையும் ஆத்து
உன்னை என் உசுருக்குள்ள
வெக்கணும் அட காத்து..

கண்ணை காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

 

பெண் மேகம் போலவே (Song lyrics & video)

Pen Megam Polave
Movie : Kathai Thiraikathai Vasanam Iyakkam
Singers : G.V.Prakash Kumar, Saindhavi
Music : Sharreth
Lyrics : Na.Muthukumar

பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
குளிர்ந்திட முத்தம் தந்தாய்
மழையென நானும் வீழ்ந்தேன்
நுரைத்திடும் கடலாய் மீண்டும்
அலைந்துன்னை தேடி வந்தேன்

இசையாலே காதல் ஜிவியாகும் சைந்தவியே
பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
விடியும் முன்னே உன்னை நிலவாய் நான் ரசிப்பேனே
கனியும் முன்னே என்னை பறித்தால் நான் சிலிர்ப்பேனே
அடி என்னை இயக்கிடும் சுவாச காற்று நீயடி
என் கண்கள் பேசிடும் கதைகள் ஓராயிரம்
அதை சொன்னால் வெல்வேனே
பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
அழகில் என்னை வென்றாய் அடடா நீ தேவதையா
அன்பில் என்னை கொன்றாய் ஐயோ நீ ராட்சசியா
மலர் கொள்ளை போலவே மனதை கொண்டு செல்கிறாய்
அதை கண்டு கொள்கையில் கம்பி நீ எண்ணுவாய்
விடுதலையே வேண்டாமே
பெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்
குளிர்ந்திட முத்தம் தந்தாய்
மழையென நானும் வீழ்ந்தேன்
நுரைத்திடும் கடலாய் மீண்டும்
அலைந்துன்னை தேடி வந்தேன்

இசையாலே காதல் ஜிவியாகும் சைந்தவியே

 

விழிகளின் அருகினில் வானம் (Lyrics & video)

படம் : அழகிய தீயே (2004)
இசை : ரமேஷ் விநாயகம்

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்… ஓ…. யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்… ஓ…. யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல… ஓ…. யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்… ஓ…. யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ… யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்… ஓ…. யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்… ஓ…. யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல… ஓ…. யா!