பாசுந்திப் பார்வை 02

ஹலோ தோழமைகளே,

அடுத்த அத்தியாயம் வந்திருக்கு.

http://www.calameo.com/read/0050348700bd1cb84fae1?authid=JnkKG4mo5RvM

எபி எப்படி? கருத்துகளைப் பதியுங்கள். முதல் அத்தியாயத்திற்குக் கமெண்ட்ஸ் தந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

Advertisements

It’s a small world!

It’s a small world!

ஐ-போனை தோள்பட்டையின் இடையில் சொருகி காதில் அழுத்திக்கொண்டு மிகவும் தீவிரமாகப் பேசியவாறு தன் மடிகணினியில் அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்தார் என் கணவர்.

அவர் அருகில் மற்றொரு இருக்கையில் நான். எனது ஐ-பேடில் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்துக்கொண்டு இருந்தேன்.

கலந்துரையாடலை முடித்து எழுந்தவர் அந்த அலுவலக நண்பரிடம் உரையாடியவாறு என்னை நோக்கிக் கொண்டிருந்தார்.

திடீரென,

“….., உங்க வைஃப்புக்குத் தமிழ் புக்ஸ் வாசிக்கும் பழக்கம் உண்டா?” என அழகான தமிழ்ப்பெயர் ஒன்றை விளித்து இவர் வினவ,

அந்த வித்தியாசமான தூய தமிழ் பெயர் என்னைக் கவர்ந்ததால் என் கவனம் கலைந்தது.

(பிரைவசியை மனதில் கொண்டு அவரின் பெயரை இங்குக் குறிப்பிடவில்லை.)

ஆர்வமாக இவரைப் பார்த்தேன். நான் எழுதுவதைப் பற்றித் தான் பகிர்ந்து கொண்டிருந்தார். என் ப்ளாகின் (blog) முகவரியை கேட்டுக்கொண்டு விடை பெற்றார் மறுபுறம் பேசிய நண்பர்.

இங்கு இவரிடம், “ஒரு நாவலும் ஒரு சிறுகதையும் மட்டுமே முடித்திருக்கிறேன்.. அதுக்குள்ள உங்க ஆபீஸ் ப்ரண்ட்ஸ்க்கெல்லாம் சொல்றீங்க..” என்றேன்.

இங்கு எழுதும் பலரின் படைப்புகளின் மகாசமுத்திரத்தின் நடுவில் ஒரு சிறு துளியாகக் கூட இருக்க முடியுமா என நினைத்து நான் சங்கடப்பட, அவரோ மிகவும் கூலாக,

“அதனால் என்ன.. ஏற்கெனவே சிலருக்குத் தெரியும்” என்று புன்னகைத்தார்.

மறுபடியும் வேலையில் ஆழ்ந்தவர், “உன் நாவலின் பெயர், இதயத்தின் சு(மை)கம் நீ? யா” என என்புறம் திரும்பி வினவினார்.

“ஆமாம்..” எனத் தலையசைத்ததும் தொலைபேசி அழைப்பு.

சற்று முன் பேசிய நண்பர் தான். அவரின் மனைவி என்னுடைய முதல் கதையை என் ப்ளாகில் ஏற்கெனவே வாசித்துவிட்டார்களாம், அவரும் அவர் மனைவியும் எங்களுடன் உற்சாகமாக உரையாடினர்.

“உங்கள் மனைவியா எழுதியது…” என ஆச்சரியமாகத் தொடங்கி அவர்கள் பேசிக்கொண்டிருக்க, இவரின் முகம் மலர்ந்தது.

அந்த நண்பருக்கும், அவரின் மனைவி வாசித்த பொழுது பகிர்ந்துகொண்டதால் கதையில் வரும் சில நிகழ்வுகள் பரிச்சியமாக இருந்தது வியப்பளித்தது!

இதை எல்லாம் கேட்டதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

என் கணவரின் நிலையைச் சொல்லவே வேண்டாம்! அந்தளவு உற்சாகத்தில் இருந்தார்!

“It’s a small world!” என்று அதன்பிறகு இன்று பேசிய அத்தனை பேரிடமும் இந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லி மகிழ்ந்து போனார்.

இன்று இன்னொரு விடயமும் சொன்னார். அவரின் இன்னொரு நண்பரின் மனைவிக்கு முகப்புத்தகத்தின் வாயிலாக என்னையும் என் எழுத்துக்களையும் தெரியுமாம். அது யாரெனக் கேள்வியாய்!

இப்போது நானும் சொல்கிறேன், “It’s a small world!”

மொத்தத்தில் எங்களுக்கு இந்நாள் ஒரு மகிழ்ச்சியான நாள்.

(பின்குறிப்பு: என்னவருக்குத் தமிழில் வாசிக்கவோ எழுதவோ தெரியாது. எங்கள் இருவருக்கும் இதனால் வருத்தம் தான் என்றாலும், இது போல் சில தருணங்கள் அதைப் போக்கிவிடும்.)

~~~ ஆர்த்தி ரவி