Review Here… ~~~ தங்கள் பின்னூட்டங்களை இங்கே அளிக்கவும்…

Advertisements

5 thoughts on “Review Here… ~~~ தங்கள் பின்னூட்டங்களை இங்கே அளிக்கவும்…

 1. இதயத்தின் சுகம் நீ!!!
  மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்த நாவல். ஓர் முழுக்கதைக்கு கருத்து பதிவிடுவது இதுவே முதல் முறை.
  அமெரிக்க வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் எவ்வாறு அங்குள்ள வாழ்வோட்டத்தில் நம் ஊர் கலாச்சாரத்தை பேணுகிறார்கள் என்பதை கதையின் ஓட்டத்தில் நமக்கு தெரிவிக்கிறார் ஆர்த்தி.
  கதையில் எனக்கு மிக பிடித்த அம்சங்கள் கதையின் ஓட்டம் மற்றும் வர்ணனை.
  எங்கும் தொய்வில்லாமல் தங்கு தடையின்றி கதையை எடுத்துச் சென்றிருக்கிறார்.
  அமெரிக்க நகரங்கள் அங்குள்ள சீதோஷண நிலை பற்றிய வர்ணனைகள் நேரில் சென்று பார்த்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது.
  குடும்பம், நட்பு, பாசம் என்னும் கதம்பத்தில் காதல் திகட்ட திகட்ட மணக்கிறது.
  விக்ரம் பயங்கர தீவிரவாதி..ஹஹஹா காதல் தீவிரவாதி. அவர் ஓட்டும் ரொமான்ஸ் ட்ரெய்லர்கள் அப்பப்பா….நயாகரா நீர்வீழ்ச்சி போல பொங்கி வழிகின்றது.
  விக்ரமன் ஆராதியா குடும்பங்களுக்கு இடையிலான நட்பின் சொந்தம் மிக மிக அழகு.
  கதையை மிக அழகாக பொறுமையாக செதுக்கியிருக்கிறார் ஆர்த்தி.
  இதயத்தின் சுகம் நீ – சுகமான அனுபவம்

  Liked by 1 person

  • Madhu Honey, ஹாய்,
   காலை எழுந்ததும் கண்களில் விழுந்தது உங்கள் பின்னூட்டம். ❤️😀 படித்து முடித்த அதே வேகத்தில் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டமை மிக்க மகிழ்ச்சியை தருகிறது. 🌹👍🏼
   ஹஹா விக்ரம் காதல் தீவிரவாதி! 😆😆 ஆம், அவனைப் போல் இன்னொரு ஹீரோவை என்னால் கொண்டு வர முடியுமா என்பது தெரியவில்லை. 😘😘😘 நன்றி! மிக்க நன்றி!
   அன்புடன்!

   Like

 2. Kayalvizhi Thiruppathi says:

  Hi akka,
  elaroda feelings ah romba note pane aluthi irunthinga.engalaala feel pana mudinchathu akka…fb la teaser pathen so rohan oda update padika konjam payam ah irunthathu akka..kasta patu read paneten..romba paavm..avan mela kova tha but avanoda death kastama iruku…Tanya & Aryan…what a lovers…amaze to see…Aryan expressions are lovely..then tanya expressions so cute…Ashwin nala thambi also good friend..aathira ku ipdi oru flashback.so sad…now happy with her life…nice..Tanya shyam ta pesura sweet surprise then ava amma ta pesunathu sema sweet.. life has many things for us… we have to move on….nice message also needy messsage… thanq akka..wating for aryan..that blue eye man…..

  Liked by 1 person

 3. kohila says:

  ஹாய் ஆர்த்தி

  படிச்சிட்டேன். ரொம்ப இதமா மனதை தொடும் அருமையான எழுத்து நடை உங்களுக்கு. வர்ணைகளும் ஒவ்வொரு காட்சிகளும் அப்படியே கண்முன் வந்தது. மென்மையான ரொமான்ஸ் கலந்த அழகான காதல் கதை…. டானியாவை பார்த்தவுடன் ஈர்க்கப்பட்டு அவள் பின்னால் செல்லும் மிகபெரிய தொழிலதிபர் ஆரியன்… தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அவன் காதலை ஏற்கமுடியாமல் தவிக்கும் டானியா.. அவளை விடாமல் துரத்தி மணக்கும் ஆரியன்… தேஜீ-சதைன்யா – லூகாஸ் இவர்கள் மூவரின் உணர்வுகளையும் ரொம்பவே அழகா சொல்லியிருந்தீங்க.. ஆதிரா கௌதம் நவீனும் கூட…. உறுத்தல் இல்லாமல் அழகான வார்த்தை பிரயோகங்களுடன் சொல்லியிருந்தீங்க…ரோகன் பற்றி படிக்கும் போது நெஞ்சம் கனத்து போனது… அதை எழுதும் போது எப்படி இருந்திருக்கும் என்னால் உணர முடிந்தது…. இதை டானியா எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று பயந்தால் அதற்கும் ஒரு தீர்வு வைத்திருந்தீர்கள். nice story arthy.. உங்களின் அடுத்த படைப்புக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  Liked by 1 person

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s