Categories
சிறுகதைகள்

PWC1 படம் பார்த்து எழுது results

‘படம் பார்த்து எழுது’ PWC1 சிறுகதைப் போட்டி முடிவுகள்.

இனிய வணக்கம் தோழமைகளே!

முதலில் போட்டியில் கலந்து கொண்ட எட்டு எழுத்தாளர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துகள்! ஆர்த்திக்காக, நட்புக்காக என்ற எண்ணங்கொண்டு நேரம் எடுத்து எழுதி அனுப்பி இருக்கிறீர்கள். உங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன்.

என்னுடன் இணைந்துள்ள நடுவர்கள் திருமதி லாவண்யா மற்றும் ஹேமா ஜெய். கேட்டதும் மிக விருப்பத்துடன் சம்மதித்து, ஆழ்ந்து வாசித்து, வெகுச் சிரத்தை எடுத்து முடிவுகளைத் தந்திருக்கின்றனர்.

Thank you 😊 Hema, Lavanya!

போட்டிக்கு வந்திருந்த எட்டு கதைகளில் வழக்கமான கோணங்களில் இருந்து கதைக் கருவிலோ அல்லது சிந்தனை வடிவிலோ வித்தியாசம் காட்டும் படைப்புகள், logical conclusion எனப்படும் ஏதேனும் ஒருவகையான நிறைவைக் கொண்ட கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முடிவை நிர்ணயிக்கும்வரை கதைகளின் ஆசிரியர் பெயர்கள் இரு நடுவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை. கதைக் கரு, எழுத்து நடை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியதால் எழுத்துப் பிழைகள், நிறுத்தக்குறிப் பிழைகள், தள்ளுபடி செய்யப்பட்டன. ஒருமித்த முடிவாகக் கதைகளின் பக்கங்களின் எண்ணிக்கையையும் தளர்த்த வேண்டியதாகி விட்டது.

இப்போது நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த முடிவுகள்.

எட்டு கதைகளில் முன்னணியில் நின்றவை மூன்று கதைகள். புன்னகைப் பூவே, தீவாளி, பஞ்சு மிட்டாய். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருப்பவை,

முதலாம் இடம்: தீவாளி – நீலாமணி

இரண்டாம் இடம்: புன்னகைப் பூவே – தேவி ஶ்ரீநிவாசன்.

அறிவித்திருந்தபடி இவர்கள் பரிசு பெறுகிறார்கள்.

இவர்களுடன் பஞ்சு மிட்டாய் – மதி நிலா அவர்களுக்கு ஆறுதல் பரிசும் கிடைத்திருக்கிறது.

மூவருக்கும் நல்வாழ்த்துகள் தோழமைகளே! 💐🎉🎈🎊❤️

எழுத்தாளர் யாரென ஊகிக்க முடியாத வகையில் எழுதி இருந்தார்கள் அனைவரும். ❤️😲

சிட்டு – எழில் அன்பு

பேரழகி – அமுதவல்லி நாகராஜன்

வாடி என் ராசாத்தி – முருகேசன் லக்ஷ்மி

தேவதை அவள் தேவதை – ராஜேஸ்வரி. D.

பொக்கிஷ புன்னகையே – யாழ் வெண்பா

Participants please send your address to me.

Thank you 🙏🏻 all!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.