Categories
தீராதது.. காதல் தீர்வானது பின்னூட்டங்கள் வாசகர்களின் கருத்துக்கள் Reviews

Review for “தீராதது காதல் தீர்வானது” by writer Jansi Michael.

OTD 2017

பாதிவரை ஏற்கெனவே வாசித்து தொடராமலிருந்த நாவல் ஒன்று….நேற்று வாசிக்க கிட்டியது…

கதை: தீராதது காதல் தீர்வானது

எழுத்தாளர்: ஆர்த்தி

எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பலவிதங்கள். சில நடைமுறைகள் சம்பவம் சொல்லும், சில நம்மை தன் கைப் பிடித்து இழுத்துக் கொண்டே போய் கதையோடு பயணிக்க வைக்கும்.

இதில் இரண்டாவது வகை எழுத்துக்கள் இவை.இங்கே கதை ஒரு பக்கம் அது பாட்டிற்கு இருக்கட்டும் ………அது தரும் வாசிப்பின் அனுபவம் அதுதான் முக்கியம்.

நம் கால்படாத ஒரு மண்ணின் குளிரை, வெயிலை, வெப்பத்தை, கசகசப்பை கதாபாத்திரங்களோடு உணர வைக்குமிடம்…

நாம் அறிந்திராத கதாநாயகனின் வேலையை, அதன் பிரமாண்டத்தை , அதை அவன் செய்யும் நேர்த்தியை உணர வைக்கும் விதம்…

மனித மனதின் உணர்வுகளே நேர்மறை, எதிர்மறையாக நின்று கதா நாயகியை இறுகச் செய்யும் போது நாமும் இறுகுவதும், அவள் பின்னர் காதலில் இளகி அத்தனையும் நேர்மறையாய் காணும் போது அவளோடு இளகுவதும்,

நீலக்கண்களில் அவள் ஒவ்வொருமுறை மூழ்கும் போதும் நம்மையும் சேர்த்து….

கதா நாயகனின் ஆளுமையும், அவன் தன் காதல் பால் வைத்திருக்கும் நம்பிக்கையும், ஒவ்வொரு முறையும் பிரச்சினைகளை துணிந்து ஏற்று வெல்வதும்…..

எல்லாம் நாம் நேரில் காண்பதாய் உணரச் செய்வதும் அத்தனை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் உள்வாங்க முடிவதும் தான் இந்த கதையின் சிறப்பு ….

அஸ்வின், ஆதிரா, கௌதம், டானியாவின் அப்பா, பாட்டி என ஒவ்வொரு இயல்பான கதாபாத்திரங்க்களும் ஒவ்வொரு செய்தி சொல்கின்றன.

எனக்கு பிடித்த காட்சிகள் ஏராளம் இருக்கின்றன…. டானியாவும் ஆர்யனும் மறுபடி சந்திக்கும் அந்த சீன் அதில் ஒன்று.

வாழ்வில் தோல்வி என்ற ஒன்றை அறிந்து வைத்திருப்பதும் தேவையான ஒன்று எனும் பாடம்……. அதை உணர்த்தும் ரோகனின் தற்கொலை , அதை அவன் செய்த விதம் உலுக்கிற்று……அந்த சோகத்தை தீர்க்க அவன் பெற்றோர் நாடிய தீர்வு பிரமிக்கதக்கதே….

வலிகள் நல்லவையோ !!….ஒரு சில வலிகள் வழக்கமான வாழ்க்கையை விட்டு மிகப்பெரிய சாதனைகளுக்கு மனிதனை இட்டுச் செல்கின்றதே…..

மொத்தத்தில் எந்த ஒரு தீராத பிரச்சினைக்கும் தீர்வு அன்பு தான் என்பதாய் ….தன் தாழ்வு மனப்பான்மையால் கூனி குறுகி போயிருந்த டானியாவை ஈர்த்த, மலரச் செய்த ஆரியனின் அன்பு…. கதை முழுக்க நறுமணம் வீசியது….😍😍😍😍😍😍😍

கதையோடு பயணிக்கும் கவிதைகள் அழகு (y)

அருமையான கதை ஆர்த்தி

நல்வாழ்த்துக்கள்….

மென்மேலும் நல்ல பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.